தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி ஏற்க உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என பல மாதங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
3 அமைச்சர்கள் நீக்கம்:-
தற்போது பால்வளத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ்,
சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான்,
சுற்றுலா துறை அமைச்சரான கே. ராமசந்திரன் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து விடுவித்து முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு, வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாடு துறை வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறையை அமைச்ச்ராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள்:-
செந்தில்பாலாஜி
ஆவடி சா.மு. நாசருக்கு
கோவி. செழியன்
பனைமரத்துபட்டி ராஜேந்திரன்
குன்னூர் ராமசந்திரன்
புதிய அமைச்சர்களுக்கு பதவி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.