அமீர் அம்சாவிற்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

அமீர் அம்சாவிற்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் விருது
இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம், இராமநாதபுரம் வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவிற்கு நேற்று சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
அப்பாஸ் அலி டிரஸ்ட் என்ற பெயரில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வேன் வைத்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் பிணங்களை இலவசமாக நல்லடக்கம் செய்தும் வருகிறார்.
மனநலன் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறார். இந்த சேவைகளை சாதி பேதமில்லாமல் அமீர் அம்சா செய்கிறார்.1.9.2014 அன்று இராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 80 பேருடன் சென்ற பஸ்சில், கீழக்கரை அருகே தீ விபத்து ஏற்பட்டபோது அவரது உதவியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதற்காக அவருக்கு அப்போது ‘நல்ல சமாரியன்’ விருது வழங்கப்பட்டு இருந்தது. அமீர் அம்சாவின் சேவை, வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு சான்றாக இருப்பதால் அவரைப் பாராட்டி கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த விருதுக்கான ரூ.5 லட்சம் பணம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது