வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த வழக்கு: புதுக்கோட்டை கோர்ட்டில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த வழக்கு: புதுக்கோட்டை கோர்ட்டில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

புதுக்கோட்டை , ஜன.25-

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த வழக்கு: புதுக்கோட்டை கோர்ட்டில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த ஊரைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேங்கைவயல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் எஸ்.சி. மக்களுக்கான குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் 26-ந்தேதி மலம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் எதிரொலித்தது.

குடிநீர் அசுத்தப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரணை முடியவில்லை

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குடிநீரை அசிங்கப்படுத்திய விவகாரம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது.

அவரும் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல் மணி, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று வாதிடப்பட்டது.

கலந்தது யார்?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி கூறியதாவது:-

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான புலன் விசாரணை முடிந்து விட்டது.

இந்த வழக்கில், அந்த ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டி கடந்த 20-ந்தேதி புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில், வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா என்பவர், குடிநீர் தொட்டி ஆபரேட்டரான சண்முகத்தை பணி நீக்கம் செய்துள்ளார்.

இதில் ஏற்பட்ட பிரச்சினையில் பஞ்சாயத்து தலைவரின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொய்யான தகவலை முரளிராஜா பரப்பியுள்ளார்.

இதையடுத்து முத்துக்கிருஷ்ணனும், சுதர்சனும் குடிநீர் தொட்டியில் ஏறிச்சென்று பார்ப்பதுபோல் குடிநீரில் மலத்தை கலந்து குற்றச் சம்பவத்தை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது” என்றார். இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார்.

அவகாசம் வேண்டும்

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ”இந்த வழக்கையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தவர்கள் மீதே குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல. உண்மையில் குடிநீர் தொட்டி ஆபரேட்டரான மாற்று சமூகத்தைச் சேர்ந்த சண்முகத்தை பணி நீக்கம் செய்ததற்கு வேங்கைவயல் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பஞ்சாயத்து தலைவரின் கணவரின் தூண்டுதலின்பேரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக இந்த வழக்கை புலன் விசாரணை செய்யவில்லை, ஒருநபர் ஆணையமும் இதுவரையிலும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அரசியலாக்கக் கூடாது

இதையடுத்து நீதிபதிகள், ”சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்தி கீழ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. குற்றப்பத்திரிகையில் அதிருப்தி இருந்தால் கீழ் கோர்ட்டை அணுகலாம்.

அரசு தரப்பின் அறிக்கைக்கு வருகிற மார்ச் 10-ந்தேதிக்குள் மனுதாரர் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை மார்ச் 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button