ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளத்தில் அல்ஹமீது புதிய பள்ளிவாசல் திறப்பு விழா சமூக நல்லிணக்கத்தோடு நடைபெற்றது

மீமிசல், ஜன.24-
ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளத்தில் அல்ஹமீது புதிய பள்ளிவாசல் திறப்பு விழா சமூக நல்லிணக்கத்தோடு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலை அடுத்த நாட்டானி புரசக்குடி ஊராட்சி உட்பட்ட கடற்கரை சாலையில் உள்ள ஆர்.புதுப்பட்டினம் உப்பளத்தில் அல்ஹமீது புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
மீமிசல் அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கிராமத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உப்பளம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் அங்கு வாழ்ந்த சில இஸ்லாமிய மக்கள் சிறிய கொட்டகையில் தொழுகை நடத்தி வந்தார்கள்.
எனவே இஸ்லாமிய மக்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் ஒன்றை கட்ட வேண்டும் என்று பல நாட்களாக விரும்பி வந்தார்கள்.
இந்நிலையில் ஆர். புதுப்பட்டினம் ஜமாத்தார்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த இந்து பிரமுகர்களை சந்தித்து பள்ளிவாசல் கட்ட ஆலோசனை மற்றும் நிதிகளை பெற்று பள்ளிவாசல் கட்டினார்கள்.
அவ்வாறு கட்டப்பட்ட பள்ளிவாசலை சிறப்பு தொழுகையுடன் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக திறந்து வைக்கப்பட்டது.
இதில் இந்து மக்கள் கிராமம் கிராமமாக சீர்வரிசை தட்டுகளுடன் அங்கு வந்து இஸ்லாமியர்களை கட்டித்தழுவி மகிழ்ந்தனர்.
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மமக பொது செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயம் சண்முகம், ராஜநாயகம், ரத்தின சபாபதி, முன்னாள் ஒன்றிய தலைவர்கள் பரணி கார்த்திகேயன், சீனியர் உள்ளிட்ட முன்னாள் இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புகைபடங்கள்







வீடியோ