அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலயம், ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் மற்றும் முத்துமீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.
அறந்தாங்கி,மார்ச்.26-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலயம், ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் மற்றும் முத்துமீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திசைகள் அமைப்பு தலைவர் மருத்துவர் தெட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி அ.அலெக்சாண்டர் முகாமை துவக்கிவைத்தார்.
தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன், தி ஃபோர்ட் சிட்டி ரோட்டாரி கிளப் தலைவர் சையது பாவா பகுருதீன் ஆகியோர் முன்னிலையில் ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் தலைவர்
ஆண்டோ பிரவின் அனைவரையும் வரவேற்றார்.
குழந்தைகள் நல மருத்துவர் முகமது அலி ஜின்னா, இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் சரவணன், இருதய நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் மனோஜ், விபத்து அவசர சிகிச்சை மருத்துவர் சிவபிரகாஷ், பல் அறுவை சிகிச்சை மருத்துவர் யமுனா, மருத்துவர் புவனேஷ்வரி, மருத்துவர் மதுமிதா, சித்த மருத்துவ ஆலோசகர் ஜான்பீட்டர் ஆகியோர் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகளையும் வழங்கினர்.
250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்ற இந்த மருத்துவ முகாமில் ஸ்ரீசஞ்சீவி இரத்தப்பரிசோதனை நிலையம் இலவசமாக இரத்தப்பரிசோதனை செய்து கொடுத்தனர்.
இறுதியில் ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் பொருளாளர் ஆனி ஆண்டோ நன்றி கூறினார்.