பஸ்களை இயக்கும்போது செல்போன் பேசும் டிரைவர்கள் 29 நாட்கள் பணியிடை நீக்கம் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
சென்னை, டிச.24-
பஸ்களை இயக்கும்போது செல்போன் பேசும் டிரைவர்கள் 29 நாட்கள் பணியிடை நீக்கம் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை.
விபத்துகள்
நாட்டில் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போது சாலை விபத்துகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.
அந்த அமைப்பில் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பதிவு செய்கின்றன. அதன்படி 2021-ம் ஆண்டு முதல் கடந்த 9-ந் தேதி வரை மொத்தம் 14 லட்சத்து 10 ஆயிரத்து 590 விபத்துகள் நடந்துள்ளன. அதில் நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் தான் 1 லட்சத்து 97 ஆயிரத்து 97 விபத்துகள் நடந்துள்ளன.
புகார்கள்
மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் பட்டியலை தொகுத்து வெளியிட்டு உள்ளது. அதன்படி மொத்தம் 15 லட்சத்து 2 ஆயிரத்து 416 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் உத்தரபிரதேசத்தில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தப்படியாக தமிழகத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
எனவே தமிழக அரசு சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதனிடையே தமிழகத்தில் அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்கள் செல்போன் பேசியபடி, வாகனங்கள் இயக்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இது குறித்து பலரும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
பணி நீக்கம்
மதுராந்தகம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த பஸ் டிரைவர் (ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்) கனகராஜ், தாம்பரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு பஸ்சை ஒட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு கையில் செல்போனில் பேசியபடி, ஒரு கையில் பஸ் ஸ்டியரிங்கை பிடித்து பஸ்சை ஓட்டி சென்ற காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதனால் தமிழக அரசு, அவரை உடனடியாக பணி நீக்கம் செய்தது.
ஏற்கனவே தமிழக அரசு பஸ்களை இயக்கும் போது செல்போன் பேசினால், அவர்களது லைசென்சு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. இனிமேல் லைசென்சு ரத்துடன், பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்தும் உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநகர் மற்றும் விரைவு போக்குவரத்து கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், டிரைவர்கள் பஸ்களை இயக்கும்போது, செல்போன் பேசியபடி ஓட்டினால் உடனடியாக அவர்கள் 29 நாட்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட வேண்டும். அதோடு அதன்பிறகு 7 நாட்கள் அவர்கள் பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த பணியிடை நீக்கம் மற்றும் பயிற்சிக்கு செல்லும் நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையில் அனைத்து டிரைவர்களிடமும் கையெழுத்து பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை தங்களது பையில் வைத்து கொள்ளலாம். ஆனால் பஸ்சினை இயக்கும் போது நிச்சயமாக அதனை எடுத்து பேசக்கூடாது. மேலும் பயணிகளுக்காக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தும் போதும் செல்போன் எடுத்து பேசக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
உடனடி நடவடிக்கை வேண்டும் இது குறித்து அனைத்து மேலாளர்களும் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் யாராவது செல்போனில் டிரைவர்கள் பேசுவதை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து அனுப்பினாலும் உடனடியாக நடவடிக்கை எ