பெண்களே உஷார்! இராமேசுவரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா பொருத்தி படம்பிடித்த 2 பேர் கைது: ஏராளமான வீடியோக்கள் எங்கே? அதிர்ச்சி தகவல்.
இராமேசுவரம், டிச.24-
பெண்களே உஷார்! இராமேசுவரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா பொருத்தி படம்பிடித்த 2 பேர் கைது: ஏராளமான வீடியோக்கள் எங்கே? அதிர்ச்சி தகவல்.
இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா ெபாருத்தி படம் பிடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை பதிவு செய்த வீடியோக்கள் எங்கே? என்பது ெதாடர்பான அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
அக்னி தீர்த்த கடற்கரை அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது. இந்தியா முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வருகின்றனர். பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிவிட்டு அதன்பின்னர் கோவிலுக்கு சென்று, அங்குள்ள தீர்த்தக்கிணறுகளிலும் நீராடியபின், சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், ராமேசுவரம் கோவிலுக்கு வந்திருந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக கட்டணம் எடுத்துள்ளனர்.
ரகசிய கேமரா அப்போது அங்கு பணியில் இருந்த டீ மாஸ்டர், வயதான பெண்களை ஒரு அறைக்கும், இளம்பெண்களை மற்றொரு அறைக்கும் செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகம் அடைந்த ஒரு இளம்பெண், துணி மாற்றுவதற்காக சென்றுள்ளார்.
அந்த அறை சுவரை முழுவதுமாக கவனித்துள்ளார். அப்போது அந்த அறையின் டைல்ஸ் கற்களுக்கு நடுவே ரகசியமாக கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கவனித்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதனால் அவருடன் அந்த அறைக்கு உடை மாற்ற சென்றிருந்த இளம்பெண்களும் அதிர்ச்சி அடைந்து அலறினர். பின்னர் கையால் அந்த கேமராவை கைப்பற்றிய அந்த பெண், அவரது தந்தையிடம் கொடுத்தார்.
2 பேர் கைது இதை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை சூப்பிரண்டு சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார் கேமராவை கைப்பற்றியதுடன் உடை மாற்றுவதற்காக வரும் பெண்களை அந்தரங்கமாக படம் பிடிப்பதற்காக கேமரா வைத்திருந்ததாக டீக்கடை நடத்தி வரும் ராமேசுவரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (வயது 34), அந்த கடையில் வேலை பார்க்கும் டீ மாஸ்டர் ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த மீரான்மைதீன் (34) ஆகிய 2 பேரையும் கோவில் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த பக்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையின்போது இருவரும் போலீசாரிடம் கூறியதாவது:- ஆன்லைனில் வாங்கினோம் பெண்கள் உடை மாற்றும் அறையில் சுவரில் கருப்பு மற்றும் வெள்ளை கலரில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இளம்பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடிக்க ஆன்லைனில் கருப்பு நிற கேமராவை ஆர்டர் செய்து வாங்கினோம். கருப்பு நிற டைல்ஸ் கற்களின் நடுவே அதை பொருத்தியதால், எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்கு வைத்திருந்தோம். சில நாட்களாக படம் பிடித்து உள்ளோம்.
நிறைய பெண்களின் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மெமரி கார்டை மாற்றி, மாற்றி பதிவு செய்தோம். தற்போது சிக்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். அதிர்ச்சி நிறைய பெண்களை இவர்கள் படம் பிடித்து உள்ளதால் அதுதொடர்பான வீடியோக்களை வைத்து யாரையும் மிரட்டினார்களா அல்லது வலைத்தளங்களிலோ, வேறு யாருக்கும் பகிர்ந்தார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அவர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி அனைத்து வீடியோக்களையும் அழிக்க போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், இருவருக்கும் தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேசுவரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து பெண்களை படம் பிடித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.