படகில் கிடந்த ஆண் சடலம்; போலீசார் விசாரணை.
மணமேல்குடி, செப்.16-
மணமேல்குடி அருகே பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஆள் இல்லாமல் ஒரு நாட்டுப்படகு நின்றது. இதைப்பார்த்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது படகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், மணமேல்குடி கடலோர இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் அங்கு சென்ற போலீசார் மீனவர்கள் உதவியுடன் ஆண் உடலை மீட்டு பொன்னகரம் கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? படகு யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.