மணமேல்குடி ஆவுடையார்கோவில் சாலையில் இயங்கிய மீன் கடைகள் அகற்றம்.
மணமேல்குடி, செப்.2-
மணமேல்குடியில் இருந்து ஆவுடையார்கோவில் செல்லும் சாலை மிகவும் பரபரப்பான சாலையாக உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியாக உள்ளது.
இந்த சாலையோரம் தற்காலிக மீன் கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
மேலும் மீன் கழிவுகள் அருகே உள்ள மஞ்சள் குளத்தில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே இந்த மீன்கடைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி உத்தரவின் பேரில் மணமேல்குடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, துணை தலைவர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் தண்டலை சாலையில் இயங்கி வந்த மீன் கடைகளை அகற்றினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1