வாலிபர் உடல் மீனவர் வலையில் சிக்கிய வழக்கு:தனிப்படை போலீசார் விசாரணை
மணமேல்குடி, ஜன.8-
வாலிபர் உடல் மீனவர் வலையில் சிக்கிய வழக்கு:தனிப்படை போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினம் கடலோர பகுதியில் கடலில் கல்லை கட்டிய நிலையில் வாலிபர் உடல் மீனவர் வலையில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற அடையாளம் தெரியவில்லை.
அவர் கடலில் கல்லை கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதினர். அவரது உடலை அடையாளம் காண உடல் உறுப்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு மணமேல்குடி சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் விசாரணைக்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வாலிபர் உடல் மீட்கப்பட்டதில், அவரை அடையாளம் காண தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.