சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 27).
மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் கடற்கரை பகுதியில் வேலை நிமித்தமாக இருந்துள்ளார்.
அப்போது 8 முதல் 11 வயது வரையிலான 3 சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதனைபார்த்த அப்துல்லா 3 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்ப வம் தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அப்துல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





