கொடிக்குளம் ஆவுடையார்கோவில் அமரடக்கி வல்லவாரி நாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் ஜூன்.03 மின்தடை அறிவிப்பு.
கொடிக்குளம் ஆவுடையார்கோவில் அமரடக்கி வல்லவாரி நாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் ஜூன்.03 மின்தடை அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, நாகுடி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் 03.06.25 செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் மீமிசல், கோபாலப்பட்டினம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், மணமேல்குடி, அம்மாபட்டினம், கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில், ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புனவாசல், பொன்பேத்தி, அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 03.06.25 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஏற்பட்ட மின்தடை என்பது மே மாதத்திற்கான மின்தடை ஆகும். தற்பொழுது ஜூன் மாதத்திற்கான மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
இந்த மின்வினியோகம் நிறுத்தம் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டு இருக்க கூடும் என்று அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






