கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று 15-08-24 வியாழக்கிழமை காலை தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவச் செல்வங்கள் அணிவகுத்து நிற்க, நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி சீதா லட்சுமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் வருகை புரிந்த ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாலமன் மற்றும் ஆசிரியர் பால வடிவேல் ஆகியோர் பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி சீதா லட்சுமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவினை பள்ளியின் தலைமை ஆசிரியர் சாலமன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.