1980 சட்டபேரவை தேர்தலில் 36,519 வாக்குகள் பெற்ற மர்ஹும் மூ.மூ.முகமது மசூத்.
தமிழகத்தின் ஏழாவது சட்டப் பேரவைத் தேர்தல் 1980 மே 28 அன்று நடைபெற்றது. அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவாவால் அரசு எந்திரத்தின் தோல்வியால் கலைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சிக் காலம் (அதிமுக) முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
1980 சட்டபேரவை தேர்தலில் ரெட்டி.திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரஸுடனும் (இந்திரா), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-ஜனதா கட்சியுடனும் கூட்டணி அமைத்தன.
அது எம்.ஜி.ஆர்-ன் மோகம் நிறைந்த காலம், யார் எந்த தொகுதியில் நின்றாலும் எம்.ஜி.ஆர் கை காட்டினாள் அவர் கண்டிப்பாக வெற்றிபெருவார் என்ற ஒரு தேர்தல் களமாக இருந்தது.
அப்போது நடந்த தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசு முதன் முதலாக வேட்பாளராக களம் இறங்கினார். திமுக மற்றும் ஜனதா கட்சி கூட்டணி சார்பில் முத்தையா களம் இறங்கினார்.
அதே சமயத்தில் தான் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் மூ.மூ.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் மூ.மூ.முகமது நசூர்தீன் அவர்களின் சகோதரரும் ஆகிய மர்ஹும் மூ.மூ.முகமது மசூத் அவர்கள் சுயட்சை வேட்பாளராக களம் இறங்கினார்.
அன்றைய தினம் அறந்தாங்கி தொகுதியில் மட்டும் மொத்தம் 1,36,966 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 1,03,790 வாக்குகள் மட்டுமே பதிவாகின.
அதிமுக வேட்பாளர் சு.திருநாவுக்கரசு சுமார் 50,792 வாக்குகள் பெற்றார். ஆனால் சுயட்சையாக களமிறங்கிய மர்ஹும் மூ.மூ.முகமது மசூத் அவர்கள் சுமார் 36,519 வாக்குகள் பெற்று 14,273 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து திமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளினார்.
ஒரு சுயட்சை வேட்பாளர் தனி ஒரு ஆளாக நின்று இவ்வளவு வாக்குகளை பெற்றது அப்பொழுதைய அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.
கோபாலப்பட்டினத்திலிருந்து ஒரு மனிதர் அன்றே அரசியல் களத்தில் தனது அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார், தனக்கென்று ஒரு மக்கள் பலத்தை உருவாக்கி வைத்திருந்தார் என்பதை இன்றைய மற்றும் நாளைய சமுதாய மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இதை நாம் உங்களுக்கு பதிவு செய்கின்றோம்.
இன்று 02.12.2024 திங்கள் கிழமை மூ.மூ.முகமது மசூத் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். அவருடைய மன்னரை மற்றும் மறுமை வாழ்விற்காக அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.