கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடை சார்பில் தெருக்களின் பெயர் பலகை வைப்பு.
கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை சார்பாக கோபாலப்பட்டினத்தில் உள்ள தெருக்களின் பெயர்கள் சூட்டப்பட்ட புதிய பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் GPM மக்கள் மேடை என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த அமைப்பின் மூலம் கோபாலப்பட்டினத்திற்கு பல்வேறு நலவுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தற்பொழுது கோபாலப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களுக்கும் தெருக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினத்தில் தெருக்களை அடையாளம் சொல்ல முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது தெருக்களின் பெயர்களோடு பலகை வைத்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புகைப்படங்கள்
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/07/20240731_210524_kyoe9gtx8f1618158279942707782-1024x1024.jpeg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/07/20240731_210502_rofj0fxu1o7827339483086302850-1024x1024.jpeg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/07/20240731_210438_doo5fs611b3623618990203446679-1024x1024.jpeg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/07/20240731_210352_lwxllxv28987286503564612731-1024x1024.jpeg)
![](https://gpmthalaimurai.com/wp-content/uploads/2024/07/20240731_2104112_stprmyeg7m3969768432576046882-1024x698.jpg)
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
3
+1
+1
1
+1
+1
+1