புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு `சீல்’.
மீமிசல், மார்ச்.20-
மீமிசல் கடைவீதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஜேம்ஸ் மற்றும் மீமிசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகுமார் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது மீமிசல் கடைவீதியில் உள்ள காஜா (வயது 55) என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல் அப்பகுதியில் பாண்டி (45) என்பவரது கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 கடைகளுக்கும் அதிகாரிகள் `சீல்’ வைத்தனர். இதுகுறித்து போலீசார் காஜா, பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#gpmthalaimurai_media
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1