இராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி.
இராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி.
இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆம்புலன்ஸில் இராமநாதபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவருடன் உறவினர்கள் ஒன்பது பேர் உட்பட ஆம்புலன்ஸில் பயணம் செய்தனர். அப்பொழுது வாலாந்தர வயல் அருகே வந்தபோது வழுதூர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்த லாரி மீது ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் ஆம்புலன்ஸில் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது, மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிய வரிசை கனி, சகுபர் மற்றும் அனீஸ் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பழியாகினர்.
ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் அதன் பின்னால் வந்த கார் உள்ளிட்ட வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி சேதம் அடைந்தது.
One Comment