இனி CALL செய்யவும்-SMS பன்னவும் தனித்தனி ரீசார்ஜ் டிராய் அதிரடி உத்தரவு.

இனி CALL செய்யவும்-SMS பன்னவும் தனித்தனி ரீசார்ஜ் டிராய் அதிரடி உத்தரவு.

டிச.24-

இனி CALL செய்யவும்-SMS பன்னவும் தனித்தனி ரீசார்ஜ் டிராய் அதிரடி உத்தரவு.

அடுத்த 30 நாட்களுக்குள் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு

இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துவிட்டதால், ஆண்ட்ராய்டு  போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே தற்போது  ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஃபோன் கால், எஸ்எம்எஸ் மற்றும் இணையதள சேவை போன்றவைகளுக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்கிறார்கள்.

பொதுவாக ரீசார்ஜ் செய்யும்போது அன்லிமிடெட் கால் வசதியுடன் 100 எஸ்.எம்.எஸ். செய்து கொள்ளும் வசதி நமக்கு கிடைக்கிறது. இதனால், ரீசார்ஜ் செய்யும் கட்டணம் அதிகமாகிறது. ஆகையால், இனி ஃபோன் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் செய்வதற்கும் தனித்தனியே ரீசார்ஜ் கட்டணங்கள் அமல்படுத்த உள்ளன.

இதுதொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, இனி கால் மற்றும் எஸ்எம்எஸ் தேவைகளுக்கு தனி தனியாக ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனை அடுத்த 30 நாட்களுக்குள் அமலுக்கு கொண்டு வர வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சிக்கல்கள் என்ன..?

பல பயனர்கள் ஒரே மொபைலில் 2 சிம்கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் ஒரு சிம் மட்டுமே முழுமையாக செயல்படுகிறது. மற்றொரு சிம் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால், இரண்டாவது சிம் மட்டுமே குரல் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு பயன்படுத்தப்பட்டாலும், முழு தொகுப்பிற்கு (Combo Plan) பணம் செலுத்த வேண்டியுள்ளது.

மொபைல் எண்கள் அரசின் சொத்து என்பதால், அவை தொலைத்தொடர்பு நிறுவனங்களால் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். பயனர்கள் தேவையற்ற சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்பதற்காக டிராய் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button