ரேஷன் கடைகளுக்கு 2025-ம் ஆண்டு விடுமுறை தினங்கள் சுற்றறிக்கை வெளியீடு

ரேஷன் கடைகளுக்கு 2025-ம் ஆண்டு விடுமுறை தினங்கள் சுற்றறிக்கை வெளியீடு

சென்னை, ஜன.25-

ரேஷன் கடைகளுக்கு 2025-ம் ஆண்டு விடுமுறை தினங்கள் சுற்றறிக்கை வெளியீடு

ரேஷன் கடைகளுக்கு 2025-ம் ஆண்டு விடுமுறை தினங்கள் குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.

திருத்தி அமைப்பு

தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2025-ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் 16-ந்தேதி வெளியிடப்பட்டது.

எனினும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த விடுமுறை தின பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட விடுமுறைதின பட்டியல் குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த.மோகன் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தினம் ஜனவரி 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), தைப்பூசம் பிப்ரவரி 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), ரம்ஜான் மார்ச் 31-ந்தேதி (திங்கட்கிழமை), மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 10-ந்தேதி (வியாழக்கிழமை), தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி (திங்கட்கிழமை), புனித வெள்ளி ஏப்ரல் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மே தினம் மே 1-ந்தேதி (வியாழக்கிழமை).

அவசியம் சார்ந்து…

பக்ரீத் ஜூன் 7-ந்தேதி (சனிக்கிழமை), மொகரம் ஜூலை 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), சுதந்திர தினம் ஆகஸ்டு 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை), கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்டு 16-ந்தேதி (சனிக்கிழமை), விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27-ந்தேதி (புதன்கிழமை), மிலாடி நபி செப்டம்பர் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை), ஆயுத பூஜை அக்டோபர் 1-ந்தேதி (புதன்கிழமை), விஜயதசமி, காந்திஜெயந்தி அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை), தீபாவளி அக்டோபர் 10-ந்தேதி (திங்கட்கிழமை), கிறிஸ்துமஸ் டிசம்பர் 25-ந்தேதி (வியாழக்கிழமை).

மேலும், பொது வினியோகத் திட்டத்தின் கீழான அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தொடர்பான அவசியம் சார்ந்து மேற்கண்ட விடுமுறை நாட்கள் குறித்து தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகம் அல்லது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனரகத்தால் அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button