கோபாலப்பட்டினம் நெடுங்குளம் அருகே புதிதாக ஆழ்துளை கிணறு (போர்) அமைக்கும் பணி இன்று துவக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ஜமாத் நிர்வாகம் பொறுப்பேற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்முறை படித்துக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கோபாலப்பட்டினம் நெடுங்குளத்திற்கு தண்ணீர் வர வேண்டிய வழிகள் எல்லாம் அடைப்பட்டு விட்டன. எனவே நெடுங்குளத்திற்கு எப்போதும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1080 அடியில் சுமார் 15 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ஜமாத் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நமது ஊர் நெடுங்குளத்திற்கு எப்போதும் தண்ணீர் இருக்கும் நன்நோக்கத்தில் 1080 அடியில் சுமார் 15 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஜமாஅத் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் இன்று 19-07-2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆழ்துளை கிணற்றின் ஆரம்ப பணிகள் துவங்க உள்ளது.
அதுசமயம் ஊரிலுள்ள அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறைவனிடம் துவா செய்து இந்த பணிகள் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இது தொடர்பாக ஜமாத் செயலாளர் இப்ராஹிம் அவர்களிடம் கேட்டபோது:-
நெடுங்குளத்திற்கு தண்ணீர் வரவேண்டிய பாதைகள் எல்லாம் அடைப்பட்டு விட்டதால் தண்ணீரின்றி குளம் வற்றிப் போய் கிடக்கின்றது.
இதனால் மக்கள் தண்ணீரின்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவேதான் நெடுங்குளத்திற்கு எப்போதும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் நெடுங்குளத்திற்கு அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இந்த ஆழ்துளை கிணறானது 1080 அடியில் சுமார் 15 லட்சம் செலவில் போடப்பட உள்ளது.
இந்த ஆள்துளை கிணறானது முழுக்க முழுக்க “தானாக இயங்கும் சூரிய மின் சக்தி” (Automatic Solar System) மூலம் இயங்கக் கூடியதாகும் இதற்கு மின்சாரம் தேவை இல்லை என்று கூறினார்.
புகைப்படங்கள்