கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மாடு, நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் தவ்ஹீத் ஜமாஅத் மனு
அறந்தாங்கி ஜனவரி 9.
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மாடு, நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் தவ்ஹீத் ஜமாஅத் மனு
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மாடு, நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமான மாடுகள் சாலையின் நடுவே அமர்ந்தும், நின்று கொண்டும் உள்ளன. குறிப்பாக அம்மாபட்டினம் பகுதிகளில் தினமும் 30 க்கும் ஏற்பட்ட மாடுகள் சாலையில் அமர்ந்து கொள்கின்றன.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும், பலத்த காயங்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகின்றன. எனவே மாடுகளை அப்புறப்படுத்த வேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதேபோன்று அம்மாபட்டினம் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், முதியவர்களும் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். தமிழகத்தில் நாய் கடியால் பல பேர் உயிரிழந்துள்ளனர்.
இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் 6 கோடியே 16 லட்சத்து 73 ஆயிரத்து 255 ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார். மேலும் 14 தலைப்புகளில் 332 பயனாளர்கள் பயன்பெற்றனர்.