அம்மாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம்.

அம்மாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம்.
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 சார்பாக கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் தொடங்கியது.
தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்த நிலையில் மே மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பெரும்பாலான பள்ளி மாணவர்கள் அதிக நேரம் செல்போனில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவும், செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கவும், மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தை போதிக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அம்மாப்பட்டினம் கிளை-1 தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் தொடங்கியது. மே 17 வரை தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் இஸ்லாமிய கல்வி மற்றும் நல்லொழுக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாப்பட்டினத்தில் அர்ரஹ்மான் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளியில் நடைபெறும் இந்த வகுப்பில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சித்திக் ரகுமான், மாவட்ட பேச்சாளர் அப்துர்ரஹ்மான் ஆகியோர் ஆண்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
பெண்களுக்கு தனியாக பெண் ஆலிமாக்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.




