டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: புதுக்கோட்டை ஆசிரியர்கள் 11 பேர் தேர்வு.

புதுக்கோட்டை, செப்.5-

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் இவ்விருதுக்கு தோ்வாகியுள்ளனர்.

இதில் மணமேல்குடி அருகே பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (பொருளியல்) ராஜநாராயணன், நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராக்கேஷ்,

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி, சுனையக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) ரவி, புதுக்கோட்டை ஒன்றியம் மேலப்பட்டி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) மகேஸ்வரன், புதுக்கோட்டை டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) யுனைசி கிறிஸ்டி ஜோதி,

அன்னவாசல் ஒன்றியம் நிலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கலைவாணி, புதுக்கோட்டை அசோக் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) பழனிசாமி, காட்டுபாவா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வசந்தமலர்,

தனியார் பள்ளிகளில் மவுன்ட் சீயோன்மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) கிருபா ஜெபராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button