சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: 20-ந் தேதி கடைசி நாள்.

புதுக்கோட்டை, ஆக.8-

சுற்றுலா தொழில்முைனவோர்கள் விருது பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 20-ந் தேதி ஆகும்.

தொழில்முனைவோர் விருது

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குகிறது.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலக சுற்றுலா தினமான அடுத்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

20-ந் தேதி கடைசி நாள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற 20-ந் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்.

மேலும், இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா துறை அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button