11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்த நியூ சங்கீத் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் உள்ள நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் பள்ளியில் படித்த மு.ரித்திகா 580/600, அ.ஆயிஷா இர்பானா 579/600, ப.அருந்ததி 576/600, ப.பரணி ஸ்ரீ 574/600, ஜ.ஜன்னத்துல் ரிலா 568/600, அ.சேக் வ‌ஸ்மியா. 557/600, ஜா.எமிரேட் மெக்கேனியா 557/600, அ.அஸூமா 555/600, நெ.முகமது ஷியாஃப் 551/600, நி.ஷிஃபானா பேகம் 550/600, க.சாதனா 550/600 ஆகிய மாணவர்கள் அறந்தாங்கி கல்வி மாவட்டம் மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் இயற்பியல், கணிதவியல், கணினி அறிவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் நான்கு மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 77 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் அனைவரும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், சிறந்த பயிற்சி அளித்த பள்ளி நிர்வாகத்திற்கும் GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button