தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை சார்பில் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே கோபாலப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பாக சுமார் 150 எழை, எளிய குடும்பங்களுக்கு 2024 ஆண்டிற்கான நோன்பு பெருநாள் ஃபித்ரா தவ்ஹீத் பள்ளிவாசலில் வழங்கப்பட்டது.
சமைப்பதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஃபித்ரா பொருட்களை ஏழை குடும்பங்களுக்கு வழங்கினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
5
+1
+1
+1
+1
+1