கோபாலப்பட்டினம் பைதுல்மால் கமிட்டி சார்பாக பெண்ணுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம் பைதுல்மால் கமிட்டி சார்பாக பெண்ணுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில்-கோபாலப்பட்டினம் பைதுல்மால் கமிட்டி-இயங்கி வருகிறது.
இந்த பைதுல்மால் கமிட்டி சார்பாக கோபாலப்பட்டினத்தில் பல ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், நலத்திட்டங்கள் என பல்வேறு மனித நேய மக்கள் பணிகளை தொடந்து செய்து வருகின்றன.
அதன் அடிப்படையில் பைத்துல்மால் சார்பாக 01-01-2025 அன்று தகுதி வாய்ந்த பெண்ணுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது மேலும் மக்களிடமிருந்து பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
பைத்துல்மால் கமிட்டியின் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களில் முதன்மையான மாதந்திர உணவுப் பொருட்கள், தையல் பயிற்ச்சி வகுப்புகள், வட்டியில்லா நகை கடன் உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள், என இன்றும் என்னற்ற சேவைகளைச் செய்து வருகிறது.
நமதூர் ஏழை எளிய வரிய நிலை மக்களின் வாழ்வாதாரங்களை மேன்மைபடுத்தவும், சீர்படுத்தவும் கோபாலப்பட்டினம் பைத்துல்மால் அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.வருடாந்திரசந்தா தொகை இரண்டாயிரம் செலுத்தி உறுப்பிர்களாக இனைந்து கொள்ளலாம்.