அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

அறந்தாங்கி, ஜனவரி 23
அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகுந்த விமர்சையாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் முதல்வர் சண்முகம் மற்றும் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
2023-2024 கல்வியாண்டில் அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, வணிகவியல் துறை, மின்னனு இயல் துறை, மற்றும் கணினி பொறியியல் துறை ஆகிய பிரிவுகளில் படித்து முடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சர்வம் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினார்.
மேலும், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பட்டமளிப்பு விழாவின் முக்கியக் காட்சிகள் மற்றும் வரவேற்புகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தன.