கைக்குறிச்சி – அழியாநிலை வரையில் நான்கு வழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா : அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை , ஜன.21-
கைக்குறிச்சி – அழியாநிலை வரையில் நான்கு வழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா : அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
திருச்சி-புதுக்கோட்டை, அறந்தாங்கி-மீமிசல் (SH 26) சாலை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் அழியாநிலை முதல் கைக்குறிச்சி வரை நான்கு வழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டுவிழா அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுக்கோட்டை புறநகர் முதல் கைக்குறிச்சி வரை 38 கோடியில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
தற்பொழுது முதற்கட்ட நான்கு வழி சாலை அமைக்கும் பணி நிறைவடைய இருக்கும் நிலையில் இரண்டாம் கட்டமாக அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அழியாநிலை முதல் கைக்குறிச்சி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியினை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் நேற்று 21.01.25 செவ்வாய் கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
விழாவில் கலந்து கொண்டவர்கள்
விழாவில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருவடிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.