உயர்கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகை; ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் கல்வியில் அடுத்த கட்டமாக உயர் கல்வி கற்பதற்காக “சீட்ஸ் (SEEDS)” என்ற அமைப்பு மூலம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
6 முதல் 10 அல்லது 12 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான கல்வி கட்டணங்கள் நேரடியாக கல்வி நிலையங்களுக்கே செலுத்தப்படும்.
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ITI, DIP படிப்புகளுக்கும் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இளங்கலை (UG) படிப்பிற்கும் சேரவிரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு எவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றின முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
உயர்கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக அமைகின்ற மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் தங்களுக்கு அறிந்த மாணவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்.
வீடியோ