ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்.
மாணவர்களுக்கு மாதம் ₹1000 கல்வி உதவித்தொகை வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் அவர்களின் மேற்படிப்பை தொடர மாதம் 1000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது.
அதைபோல், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை போல் மாணவர்களுக்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, 6 -ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் என அவர்களது கல்வியை மேம்படுத்த உதவி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘தமிழ் புதல்வன்’ என்ற திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் மாணவர்களுக்கு மாதம் ₹1000 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.