கொடிக்குளம் மற்றும் அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் பிப்ரவரி.07 மின்தடை அறிவிப்பு.

கொடிக்குளம் மற்றும் அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் பிப்ரவரி.07 மின்தடை அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம் மற்றும் அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 07.02.2026 சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் மீமிசல், கோபாலப்பட்டினம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், மணமேல்குடி, அம்மாபட்டினம், கரூர், அமரடக்கி ஆகிய அனைத்து பகுதிகளிலும் 07.02.2026 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அறந்தாங்கி, அழியாநிலை மற்றும் மறமடக்கி துணை மின்நிலையம் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கும் 07.02.2026 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
குறிப்பு: மேற்கண்ட அறிவிப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில் கடைசி நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.
மேலும் கடந்த வாரம் அமரடக்கி துணை மின் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட மின் தடையானது நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





