கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக சோலார் பேனல் அமைப்பதற்கு ரூபாய் 4,60,000 வசூல்.
கோபாலப்பட்டினம் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பாக ஆழ்துணை கிணற்றுக்கு சோலார் பேனல் அமைப்பதற்கு ரூபாய் 4,60,000 வசூல் செய்து கோபாலப்பட்டினம் ஜமாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே கோபாலப்பட்டினம் கிராமத்தில் நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தில் எப்பொழுதும் தண்ணீர் இருக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்களின் முயற்சியில் 1200 அடி ஆழம் அளவில் சுமார் 15 இலட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
மேலும் இந்த ஆழ்துளை கிணறு முழுக்க முழுக்க சோலார் மின் சக்தி மூலமாக இயங்கக்கூடிய வண்ணம் சுமார் 4 இலட்சம் செலவில் சோலார் பேனலும் அமைக்கப்பட்டது.
GPM சொந்தங்கள்
இந்த பணிகளுக்காக ஜமாத் சார்பில் நன்கொடை வசூலிக்கப்பட்டது. அதன்படி “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பில் நன்கொடை வசூல் செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” சார்பில் ஆறு நாட்களாக நன்கொடை வசூல் செய்யப்பட்டது.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்ததையடுத்து சுமார் 4,60,000 தொகை வசூலிக்கப்பட்டது.
வசூல் செய்யப்பட்ட இத்தொகையினை இன்று 12.08.24 திங்கள் கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின்னர் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” உறுப்பினர்கள் கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
வரலாற்று சிறப்புமிக்கது
“GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு” என்பது தனிப்பட்ட அமைப்போ அல்லது இயக்கமோ அல்ல. இதில் பயணிப்பர்வகள் அனைவரும் ஊர் மக்களே ஆவர். அப்படி இருக்கையில் இவ்வளவு ஒரு பெரிய தொகையை அவர்கள் பங்களித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கதே ஆகும்!
நாளை மறுமைக்காக வேண்டியும், ஊரின் நலனுக்காக வேண்டியும் தங்களுடைய சிறிய பெரிய பங்களிப்பை ஆற்றிய சொந்தங்கள் அனைவருக்கும் மற்றும் இதற்காக தங்களுடைய நேரங்கள் மற்றும் உடல் உழைப்பை செலவிட்டு வசூல் செய்த பெரியோர்களுக்கும், சகோதரர்களுக்கும் GPM தலைமறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரின் நன்மைகளையும் ஏற்றுக்கொள்வானாக!
வீடியோ