நவம்பர்.14 மின்தடை அறிவிப்பு ரத்து.
புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, நாகுடி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக 14.11.25 வெள்ளிக்கிழமை அன்று மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டது.
தற்பொழுது அந்த மின்தடை அறிவிப்பை ரத்து செய்து அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது.,
தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், அறந்தாங்கி கிராமியம் உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணைமின்நிலையங்கள் 110/33-11/0/ கொடிக்குளம் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் 33/67 ஆவுடையார்கோவில், அமரடக்கி, மற்றும் வல்லாவாரி, துணைமின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும்
அனைத்து பகுதிகளுக்கும் வருகின்ற 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று மாதாந்திர
பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என்ற தகவலானது நிர்வாக
காரணங்களால் ரத்து செய்யப்பட்டு 14.11.2025 அன்று வழக்கம்போல் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும்.
அனைத்து பகுதிக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








