கோபாலப்பட்டினம் பைத்துல்மால் கமிட்டியின் ஏழை எளிய மக்களுக்கான மனிதநேய திட்டங்கள்!
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
கண்ணியமிக்க கோபாலப்பட்டினம் வாழ் ஊர் பொது மக்களே!
நமது கோபாலப்பட்டினம் பைத்துல்மால் கமிட்டி நிர்வாகத்தின் சார்பாக நமதூரில் பல ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், நலத்திட்டங்கள் என பல்வேறு மனிதநேய மக்கள் பணிகளை தொடந்து செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் பைத்துல்மால் சார்பாக 28-09-2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் மக்களிடமிருந்து பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
கலந்தாய்வு கூட்டத்தில் வாசிக்கப்பட்ட ஆறு கடிதங்களில் ஐந்து கடிதங்கள் மாதாந்திர உணவு பொருள் கோரிக்கைக்கான மனுக்கள் பெறப்பட்ன.
- மூன்று விதவை பெண்களின் கோரிக்கைகள்,
- இரண்டு ஏழை குடும்பங்களின் கோரிக்கைகள்,
- ஒரு விதவை பெண்மனியின் தையல் இயந்திரம் கோரிக்கை.
என அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பைத்துல்மால் கமிட்டியின் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களில் முதன்மையானவைகள்.
- மாதந்திர உணவுப் பொருட்கள்
- தையல் பயிற்ச்சி வகுப்புகள்
- வட்டியில்லா நகை கடன் உதவிகள்
- கல்விக்கான உதவிகள்
என இன்றும் என்னற்ற சேவைகளைச் செய்து வருகிறது.
நமதூர் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை மேன்மை படுத்தவும், சீர்படுத்தவும் கோபாலப்பட்டினம் பைத்துல்மால் அமைப்பில் இணைந்து கொள்வீர்களாக!
வருடாந்திர சந்தா தொகை இரண்டாயிரம் செலுத்தி உறுப்பிர்களாக இனைந்து கொள்ளுங்கள்.