மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு “யூடைஸ் ப்ளஸ்” கூட்டம்.
மணமேல்குடி,செப்.23-
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு யூடைஸ் ப்ளஸ் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு
யூடைஸ் ப்ளஸ் (UDISE PLUS) கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் பள்ளியின் கட்டமைப்புகள், மாணவர்கள் விவரங்கள், ஆசிரியர்கள் விவரங்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள் போன்றவையை இணையதளயத்தில் (UDISE PLUS) பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் யூடைஸ் படிவம் பூர்த்தி செய்வதற்கான அனைத்து தகவல்களையும் பவர் பாயிண்ட் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தனியார் பள்ளி தாளாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.