நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் மாணவிகள் மணமேல்குடி தாலுகாவுக்குட்பட்ட மணமேல்குடி, மேலஸ்தனம், மும்பாலைபட்டினம் மற்றும் அம்மாபட்டினம் பகுதிகளில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தினர்.
முகாமின் போது, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயர்கல்வி விழிப்புணர்வு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம், குடும்ப உறவுகளை பேணுதல், போதைப்பொருள் தடுப்பு, செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற சமூக பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுடன் நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறப்பு முகாமில் மாணவிகள் தங்கள் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தி, சமூகத்துடன் உறுதியான தொடர்பை ஏற்படுத்தி முகாமை நிறைவு செய்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





