வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் புதிய மசோதா:- மத்திய அரசு திட்டம்.
சொத்துக்கள் மீதான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான, புதிய மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வக்ஃப் சட்டத்தில் பல திருத்தங்களைக் கோரும் மசோதாவை மத்திய அரசு விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாம், இதில் வக்ஃப் வாரியங்களுக்கு எந்த நிலத்தையும் சொந்தச் சொத்தாக அறிவிக்கும் அதிகாரத்தை சரிபார்க்க வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மசோதா வக்ஃப் சட்டத்தில் சுமார் 40 திருத்தங்களை முன்மொழிய வாய்ப்புள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வக்பு வாரிய அமைப்பு சட்டங்களும், அதிகாரங்களும் வக்பு சட்டம், 1954 வக்பு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும். அதாவது குறிப்பிட்ட சில சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் குறிப்பிட்ட பொதுநலன் வரம்புக்குட்பட்ட நன்மைக்காக அதைப் பாதுகாத்தல் மற்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் புறம்பாக அதைப் பயன்படுத்துவதையோ அல்லது அகற்றுவதையோ தடை செய்தல் போன்ற காரணங்களுக்கான அமைப்பாக செயல்படுகிறது.
வக்ஃப் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
வக்பு சட்டத்தின் பிரிவு 9 மற்றும் பிரிவு 14ஐ அமல்படுத்தவும் திருத்த மசோதா முன்மொழிகிறது என கூறப்படுகிறது.
வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பராமரிப்பதற்காக 1954-ல் உருவாக்கப்பட்ட வக்ஃப் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து, வாரியத்தின் அதிகாரங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
மசூதிகளுக்கு கொடையாக வழங்கப்பட்ட மசூதிகளின் பெயரில், நிர்வாகத்தில் உள்ள சொத்துகளே வக்ஃப் சொத்துகள் எனப்படும். இந்த வக்ஃப் சொத்துக்களை கையாள்வதற்கு 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்தின் மூலம் பல்வேறு மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் உருவாக்கப்பட்டன.
வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய மாற்றத்தால், வாரியம் எந்த சொத்தையும் வக்ஃப் சொத்தாக மாற்ற முடியாது.
சட்டத்தில் செய்யப்படும் 40 திருத்தங்களுக்குப் பிறகு, வக்ஃப் வாரியங்களின் சொத்துகள் கட்டாய சரிபார்ப்பில் ஈடுபடுத்தப்படும். இந்த சட்ட திருத்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.