குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக நிறுத்தம்: போலீசார் தீவிர விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா முகமது என்பவர் மீமிசல் கடைவீதியில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார்.
இவர் நேற்று திங்கள் கிழமை 23.04.2024 இரவு 11.30 மணி அளவில் கடை அடைத்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும் பொழுது கோபாலப்பட்டினம் பிராதன சாலையான மில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்க தொடங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் மீமிசல் காவல் நிலையம் அருகே ECR சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் வாபஸ்
விசாரணையை தொடங்கி விட்டதாகவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் தற்காலிமாக கைவிடப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன் பிறகு மாவட்ட S.P- யின் உத்தரவின் பேரில் A.D.S.P தலைமையில் தனிப்படை போலீசார் அமைத்து, தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திகொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.