பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் – முழு விவரம்!

தமிழ்நாடு, பிப். 8 –
பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் – முழு விவரம்!
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் 26.06.2024 அன்று 2025-ம் ஆண்டிற்கான பொதுத்துறை மானிய கோரிக்கையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இலவச தையல் இயந்திரம் பெறும் தகுதியானவர்கள்: முன்னாள் படைவீரரின் மனைவி
முன்னாள் படைவீரரின் கைம்பெண்
முன்னாள் படைவீரரின் திருமணமாகாத மகள்கள்
தகுதிகள்:
அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 மாத தையல் பயிற்சி சான்று பெற்றிருப்பது அவசியம்.
பயிற்சி பெற்ற நிறுவனத்தால் தையல் இயந்திரம் வழங்கப்படாதவர்களுக்கு மட்டும் அரசு ஒருமுறை இலவச தையல் இயந்திரம் வழங்கும்.
விண்ணப்பிக்க எப்படி?
நேரில் சென்று விண்ணப்பிக்க:
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம்
தொலைபேசியில் தொடர்புகொள்ள:
044-22350780
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., இதற்கான தகவல்களை வழங்கி, தகுதியான பயனாளிகள் இந்த திட்டத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த திட்டம், முன்னாள் படைவீரர் குடும்பத்தினரின் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு அமல்படுத்தப்படுகின்றது.