28 மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் நிறைவு: தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு , ஜன.7-
28 மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் நிறைவு: தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு.
ஊராட்சித்துறை தனி அலுவலர்களுக்கான பொறுப்புகள் என்ன ,கடமைகள் என்ன தமிழக அரசு வெளியிட்ட வழிமுறைகள் முழு விவரம்
1) ஊராட்சி கூட்டங்கள்
1. (a). கிராம ஊராட்சி தனி அலுவலர் மன்றப்பொருள் அங்கீகாரத்தின் நிறைவேற்றப்பட அடிப்படையில் தீர்மானங்கள் வேண்டும். மன்றப்பொருள் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும்.
1. (b). அரசு நிர்ணயித்துள்ள நாட்களிலும், அரசு எந்தெந்த நாட்களில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கும் நாட்களிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
2. ஊராட்சியின் மாதந்திர வரவு செலவு அறிக்கை மற்றும் கணக்குகள், ஊராட்சி தணிக்கை அறிக்கை மற்றும் சமூக தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சி நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதியில் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றை தனி அலுவலரின் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும்.
3. இயற்கை சீற்றங்கள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படின் தனி அலுவலரின் ஒப்புதலுடன், காலதாமதமின்றி பணிகள் மேற்கொள்ள வேண்டும். வங்கி கணக்குகள் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல்
4. கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு https://vplax.tord.in.gov.in/ ஏதுவாக செலுத்தப்படும் வரவினங்களை கண்காணித்தல் வேண்டும்.
5. ஊராட்சிகளில் வசூல் செய்யப்படும் வருவாய் இனங்களை இணையவழியாக மட்டும் வசூல் செய்திடவும். அதற்குரிய நடைமுறையில் உள்ள பதிவேடுகளை முறையாகப் பராமரித்திட வேண்டும். மேற்கண்டவரவினங்களுக்கு உரிய பதிவேடுகளில் தனி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
6. அரசாணை எண்.117. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-1(2)), துறை, நாள் 28.10.2022-ன்படி கிராம ஊராட்சிகள் மொத்தம் 11 வகையான வங்கி கணக்குகளைப் பராமரித்து வரப்பெற்ற நிலையில், கிராம ஊராட்சிகளின் நிதி நிர்வாகத்தினை எளிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்கு திட்டம் (TNPASS) கொண்டுவரப்பட்டு, அதில் கிராம ஊராட்சியின் கணக்கு எண்-1, 2.7. 8 ஆகிய கணக்குகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்கு திட்டம் (TNPASS) நடைமுறையில் சில நிமிடங்களிலேயே ஆதார் அடிப்படையிலான கடவுச்சொல் அல்லது ஒரு முறை பயன்படும் கடவுச்சொல் (OTP) மூலம் கிராம ஊராட்சிகளில் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளில் ஆய்வு செய்திடும் நேர்வில் TNPASS மற்றும் VPTAX இணையதளத்தினை பயன்படுத்தி ஆய்வு செய்திடல் வேண்டும்.
7. அரசாணை நிலை எண் 119, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பரா -23 நாள் 16.07.2024-ன்படி சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி அளிக்கப்படுவதில் பெறப்படும் ஒப்புகை கட்டணங்களில் ஒரு சதுர அடிக்கு ரூ.22/- (ரூபாய் இருபத்தியிரண்டு மட்டும்) கட்டுமான தொழிலாளர் நல நிதியாக பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் கட்டணமானது உடனுக்குடன் உரிய அரசு தலைப்பில் தமிழ்நாடு MLWF Board செலுத்தப்பட வேண்டியதை கண்காணித்தல் வேண்டும்.
8. இணையதளம் வாயிலாக வசூல் செய்யப்படும் அத்தொகையினை வேறு பணிகளுக்கு செலவினம் மேற்கொண்டலோ செலுத்தாவிட்டாலோ அல்லது தொடர்புடைய கணக்கில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்
மாவட்ட ஊராட்சி தனி அலுவலரின் பொறுப்புகள்
1) மாவட்ட ஊராட்சி கூட்டங்கள்
1. தனி அலுவலர் மன்றப்பொருள் அங்கீகாரத்துடன் தீர்மானங்கள் மன்றப்பொருள் நிறைவேற்றப்பட வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும். இரண்டு கூட்டங்களும் இடைப்பட்ட காலம் 60 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. மாவட்ட ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை மற்றும் கணக்குகள், மாவட்ட ஊராட்சி தணிக்கை அறிக்கை மற்றும் மாவட்ட ஊராட்சி நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றை மாவட்ட ஊராட்சியின் தனி அலுவலர் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். )பணிகள் மேற்கொள்ளுதல்
3. புதிய மூலதன பணிகள் உரிய நிர்வாக அனுமதி மற்றும் தொழில் நுட்ப அனுமதி பெற்று அதன்பின் மேற்கொள்ள வேண்டும்.
4. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் பிரிவுகள் 163, 164, 165 மற்றும் 166 பிரிவுகளில் மாவட்ட ஊராட்சி பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் மற்றும் உரிய விதிகளுக்குட்பட்டு அனைத்து கடமைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஊராட்சி செயலரை அறிவுறுத்த வேண்டும்.
5. மாவட்ட ஊராட்சியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகள் உரிய முறையில் உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும். பராமரிப்பு பணிகள்
6. மாவட்ட ஊராட்சியின் பொறுப்பிலுள்ள பொது சொத்துகளான கட்டடங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் போன்றவைகளை முறையாக பராமரித்து வருவாயைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பொதுவான அறிவுரைகள்
1. ஊராட்சிகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டு எவ்வித குறைபாடும் இன்றி வழக்கினை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2. மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் அறிக்கையினை இணையதளத்தில் பணி அவ்வபோது முன்னேற்ற tnrd.gov.in பதிவுகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். உரிய நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற்ற பின்னரே பணிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், அரசாணைகள், விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றி கடமைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டு