புதுக்கோட்டையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரம்

புதுக்கோட்டை, ஜனவரி 27:
புதுக்கோட்டையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரம்
புதுக்கோட்டை மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்ததால், அவற்றை இடித்து அகற்றவும், அதே இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அருகிலுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது உள்ள கடைகள், தற்காலிக பஸ் நிலையத்தில் இயங்கும் வகையில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவடைந்த பின்னர், புதிய பஸ் நிலைய கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1