மணமேல்குடி அருகே வீட்டில் திருட்டு: 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை

மணமேல்குடி, ஜன.20
மணமேல்குடி அருகே வீட்டில் திருட்டு: 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை
மணமேல்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் நகை- ரூ.25 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை-பணம் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது காஜா. இவரது மனைவி மும்தாஜ் பேகம் (வயது 60). முகம்மது காஜா ஏற்கனவே இறந்து விட்டார். மும்தாஜ் பேகம் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.இதையடுத்து வீட்டிற்கு மும்தாஜ் பேகம் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து மும்தாஜ் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மணமேல்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.