மீமிசல் அருகே மண் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
மீமிசல், ஜன.9-
மீமிசல் அருகே மண் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே வெளியாத்தூர் பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளி செல்லப்படுவதாக அறந்தாங்கி ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து பொன்பேத்தி கிராம வருவாய் ஆய்வாளர் போத்திராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று, அங்கு மண் அள்ளி கொண்டிருந்த 2 டிராக்டா்களை பிடித்தனர். அதில் இருந்த டிரைவர்கள் தப்பியோடினர்.
இதையடுத்து 2 டிராக்டா்களை மண்ணுடன் பறிமுதல் செய்து மீமிசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய 2 டிரைவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
+1
+1
+1
+1