புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம்: வருகிற 27-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை, ஜன.8-
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி கடைசி நாளாகும்.
மருத்துவ உதவியாளர்
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு வருகிற 29-ந் தேதி அன்று கேரள மாநிலம், கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயின்றவர்கள் (திருமணமாகாத ஆண்கள் 03.07.2004 முதல் 03.07.2008-க்குள் பிறந்திருக்க வேண்டும்) கலந்து கொள்ளலாம்.
மேலும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர்) பதவிக்கு இளங்கலை, டிப்ளமோ பார்மசி முடித்த 3.7.2001 முதல் 3.7.2006-க்குள் பிறந்த திருமணமாகாத ஆண்களும், 3.7.2001 முதல் 3.7.2004-க்குள் பிறந்த திருமணமான ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி
மேலும் இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்க, திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் 01.01.2005 முதல் 01.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மேலும் இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகிற 27-ந் தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பினை புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறவும்.
இது தொடர்பான விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
3 Comments