ஆவுடையார்கோவிலில் தி.மு.க. பாகமுகவர்கள், பாகநிலை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
ஆவுடையார்கோவில், ஜன.7-
ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. பாகமுகவர்கள் மற்றும் பாகநிலை உறுப்பினர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது.
அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் சுப.த.திவாகரன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் சண்முகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொருளாளர் உதயம்தாஹீர், அறந்தாங்கி நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் கேசவன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமரன், ஒன்றிய துணை செயலாளர்கள் மதியழகன், பூங்குடி மாணிக்கம் மற்றும் பாகநிலை முகவர்கள், பாக நிலை உறுப்பினர்கள், ஒன்றிய தி.மு.க. கிளை கழகத்தினர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1