கோட்டைப்பட்டினத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம்
மணமேல்குடி, டிச.28-
கோட்டைப்பட்டினத்தில்ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம்.
மணமேல்குடியை அடுத்த கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்படுகிறது. இதற்கான விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் சீனியார் முன்னிலை வகித்தார். விழாவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அக்பர் அலி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சேர்க்கான், கலந்தர் நைனாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1