அறந்தாங்கியில் ரூ.46 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரம்; 6 தளங்களுடன் அமைகிறது.

அறந்தாங்கி, செப்.23-

அறந்தாங்கியில் ரூ.46 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் 6 தளங்களுடன் அமைகிறது.

அரசு தலைமை மருத்துவமனை

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை நகரில் இயங்கி வந்த அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது.

தற்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மட்டும் பழைய அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

மேலும் புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கியது. அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

6 தளங்களில் கட்டிடம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- அறந்தாங்கியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு மருத்துவ கட்டிடம் ரூ.46 கோடியில் கட்டப்படுகிறது. தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த கட்டிடம் அமைகிறது. இதில் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது தரைதளம் தொடங்கி 4-வது தளம் வரை கட்டப்பட்டுள்ளன. 5-வது தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு (2025) ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் கூடுதல் மருத்துவ சிகிச்சை வசதிகள் வர உள்ளன. உள் நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்டவை அமைய உள்ளது.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி

இதேபோல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும். கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படும். தற்போது இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் போதுமான சிகிச்சை வசதி உள்ளது.

இதில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகள் புதிய கட்டிடத்தில் அமையும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான கருவி, சிகிச்சைக்கான வசதிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button