இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி!
கொழும்பு:
தீவு தேசமான இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை அநுர குமார திசாநாயக்க பெற்றுள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதான அநுர குமார திசாநாயக்க, திங்கட்கிழமை இலங்கை அதிபராக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கபப்டுகிறது.
ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். ரணில் விக்ரம சிங்க மூன்றாம் இடம் பிடித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1