எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது.
ஜெகதாப்பட்டினம்,செப்.07-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து இன்று 07.09.24 சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1